அரியலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர் காலிப் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையில் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன்அனுபவம், கணினி அறிவு மற்றும் நவீன மின்னணு திரை இயக்குதல் அனுபவமும் கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும். 1.08.2015 அன்று 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜன. 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம், அரியலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.








