தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-11ஏ தேர்வுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் உள்ள தன்னார்வத் பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் தன்னார்வப் பயிலும் வட்டத்தால் பலர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஆக.6.-ல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-11ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இவ்வலுவலகத்தில் அமைதியான சூழல், காற்றோட்ட இடவசதி, அனைத்து வகை புத்தகங்கள், இணையதள வசதி உள்ளது.
எனவே மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்திடவும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வோர் தங்களது பெயரை பதியவும். பயிற்சி பெற விண்ணப்பிக்கும்போது போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்ணையும் தெரிவிக்க வேண்டும்.