10:15 PM
Rathinam Padmanaban
குமாரப்பாளையம்-கல்லுக்குடி சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
By DIN | Published on : 24th April 2017 07:58 AM | அ+அ அ- |
அரியலூர் மாவட்டம், குமாரப்பாளையம்-கல்லுக்குடி சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
திருமானூரில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: அரியலூரில் இருந்து சுண்டக்குடி,கோவிலூர் வழியாக திருவையாறு சென்று வந்த அரசுப் பேருந்து கடந்த 5 மாதங்களாக இயக்கவில்லை. எனவே இவவழித்தடத்தில் இயங்கி வந்த இந்த பேருந்தை உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும். ஏலாக்குறிச்சியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்வதை அரசு கைவிட வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றிய துணைச் செயலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கலியபெருமாள், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Posted in:
0 comments:
Post a Comment