அரியலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்
By DIN | Published on : 11th May 2017 08:32 AM | அ+அ அ- |
அரியலூர் வருவாய் வட்டம், ஓரியூர்,கரைவெட்டி,உடையார்பாளையம் வட்டம் வங்குடி,குவாகம்,பாப்பாக்குடி (தெ) ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை (12 ஆம் தேதி) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் முகாமில்,வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாகத் தீர்வு வழங்கப்படும்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment