வி. கைகாட்டி அருகே கோயில் தேரோட்டம்
By DIN | Published on : 11th May 2017 08:31 AM | அ+அ அ- |
அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டி அருகேயுள்ள மகாசக்தி, மாரியம்மன், மகாகாளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை பௌர்ணமி நாளில் நடைபெறும்.நிகழாண்டு விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் மகாமாரியம்மன், மகாகாளியம்மன் திருவீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்,பொதுமக்கள் செய்திருந்தனர்.

0 comments:
Post a Comment