பள்ளி, கல்லூரிகளில் சமையலர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர், : அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமையலர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 13 ஆண் மற்றும் 11 பெண் சமையலர் பணியிடங்கள் (ஊதிய விகிதம் ரூ.4800-10.000 (தர ஊதியம் ரூ.1.300) நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும், வயது வரம்பு 1.7.2015 தேதியில் (அ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் அரியலூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்), கல்வி தகுதி, சாதி 8) முன்னுரிமை விவரம் (ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும். (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்பு திருமணம்) வேலைவாய்ப்பு பதிவு விவரம் (இருப்பின்) குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகிய விவரங்கள் மற்றும் 4 முதல் 10 வரை உள்ள ஆவணங்களுக்கு சான்று, நகல்களுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முகவரியில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.10.2015 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்காணும் காலக்கெடுவிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. கூர்ந்தாய்வுக்கு பின் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும், அதன் விவரம் தனியே தெரிவிக்கப்படும். விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:
Post a Comment