அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் சிஇஓ அறிவுறுத்தல்
அரியலூர், : அரசு பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் அனைவரும் பாடுபட வேண்டுமென அரியலூர் சிஇஓ மாரிமுத்து பேசினார். அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2015-16ம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுக்கான தேர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் நடப்பு காலாண்டுத் தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காடு குறைந்தன் காரணம் பற்றி அறிந்து பள்ளி மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஊக்கத்தை அளிக்க வேண்டும்.
அப்போதுதான் அடுத்து வரும் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முடியும். மேலும் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களின், பெற்றோரிடம் பேசி வரவழைத்து தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் வரும் மார்ச் பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி சதவீதத்தை அளித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க ஆசிரியர்கள் முன் வர வேண்டும்.
மேலும் அரசு பள்ளிகளில் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் சிறந்த தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு மூலம் பள்ளிகளில் மாதம் இரு முறை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மீத்திறன் மிக்க மாணவர்கள் 10 மற்றும் 12 வகுப்புகளில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு 40 மாணவர்கள் வீதம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு மற்றும் தேர்வு பாட சிறப்பு ஆசிரியர்களை வைத்து அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டத்திலும் நடந்து வருகிறது. இதில் அனைத்து மாணவர்களும் தொடர்ந்து வருவதற்கு தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்களும், மாணவர்களும் வருகின்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தி வேண்டும் என்றார். கூட்டத்தில் உடையார்பாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் திருஞானம், சிஇஓ நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், பள்ளித் துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment