பதிவு செய்த பத்திரத்தை வழங்க ரூ.4,500 லஞ்சம் அரியலூர் சார்பதிவாளர் கைது
அரியலூரை அடுத்த நாயக்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 45). இவர் எல்.ஐ.சி. முகவராக வேலை செய்து வருகிறார். இவர், தனது மாமனார் பெயரிலுள்ள சொத்தினை மனைவி பெயரில் மாற்றி அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பின்புறமுள்ள எண்-1 சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட அந்த பத்திரத்தை தன்னிடம் வழங்குவதற்காக அங்கு சார்பதிவாளராக பணியாற்றி வரும் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த சுபேதார்கானை(55) சந்தித்து நீலமேகம் கேட்டார். பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை திரும்ப வழங்க ரூ.4,500 லஞ்சம் தர வேண்டும் என சார்பதிவாளர் சுபேதார்கான் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நீலமேகம் இது குறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். சார்பதிவாளர் சுபேதார்கானை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.4,500-ஐ அரியலூர் எண் -1 சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த சுபேதார்கானிடம் நீலமேகம் நேற்று கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று கையும் களவுமாக சுபேதார்கானை பிடித்து கைது செய்து, அவர் வாங்கிய 4,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்

0 comments:
Post a Comment